Enable Javscript for better performance
ஊதியம் கோரி உதவிப் பேராசிரியர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஊதியம் கோரி உதவிப் பேராசிரியர்கள் போராட்டம்

    By சிதம்பரம்  |   Published on : 08th March 2016 06:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப்  பேராசிரியர்களுக்கு கடந்த மாதம் ஊதியம் வழங்கப்படாததால், திங்கள்கிழமை சுமார் 30-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர்.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியை சமாளிக்க பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் கல்வியியல் துறையில் பணியாற்றி வந்த 369 உதவிப் பேராசிரியர்களை, தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கு பொதுவிதி எண்: 11-ன் கீழ், 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக அரசு கல்லூரி  கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார்.

    அதன் பேரில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 369 உதவிப் பேராசிரியர்களுக்கு கடந்த ஜன.1-ம் தேதி பணிமாற்றம் குறித்த பணி ஆணை வழங்கி பணியிலிருந்து உடனடியாக விடுவித்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 366 பேர் பணியில் சேர்ந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், பணிமாற்றம் செய்யப்பட்ட மேற்கண்ட 366 உதவிப் பேராசிரியர்களுக்கும் கடந்த இரு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.   அரசுக் கல்லூரிகளில் அவர்களது சிபிஎஸ் எண் உள்ளிட்ட விவரங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை. எனவே, ஊதியம் வழங்கப்படவில்லை என அரசுக் கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர்.

    துணைவேந்தர் செ.மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் மேற்கண்ட உதவிப் பேராசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் பணிமாறுதல் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர்களின் சிபிஎஸ் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்து ஊதியம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai