சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே குளத்தில் மூழ்கி பேக்கரி ஊழியர் உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம், ஆனாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து (40). இவர், அங்குள்ள பேக்கரி ஒன்றில் சுவீட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை இவர் தனது மனைவி சுந்தரத்துடன், பண்ருட்டி அருகேயுள்ள கொளஞ்சிக்குப்பம் அய்யனார்  கோயிலுக்கு வந்திருந்தார்.

    கோயில் பின்புறத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்றவர், தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மனைவி சுந்தரம் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai