சுடச்சுட

    

    திண்டிவனம் சென்று வருவதாக கூறிச் சென்ற தனது தந்தை வீடு திரும்பவில்லை என மகன் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    பண்ருட்டி ஒன்றியம், எல்.என்.புரம், காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் (58). லாரியில் சரக்கு ஏற்றி, இறக்கும் தொழிலாளி. 

    இவர், கடந்த 1ஆம் தேதி, தர்பூசணி லோடு ஏற்ற திண்டிவனம் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றாராம்.

    ஆனால், இதுநாள் வரை வீடு திரும்பவில்லையாம். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லையாம்.

    இதுகுறித்து, அவரது மகன் அய்யனார் (24), பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai