சுடச்சுட

  

  மாவட்டத்தில் தேர்தலின் போது பணிப் பரிமாற்றத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 27 பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது.

  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

  தேர்தலின் போது, பணம் பரிமாற்றம் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 

  இதற்காக, பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு படை ஆகியவற்றை அமைத்து பல்வேறு நிலைகளில் கண்காணிப்புப் பணியை தீவிரமாக்குகிறது.

  நடைபெறும் தேர்தலில் மாவட்டத்தில்  27 பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புப் படை அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  அதன்படி, 9 பேரவைத் தொகுதிகளில் தலா 3 பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புப் படை அமைக்கப்படும். பறக்கும் படையில் வட்டாட்சியர் அளவிலான அதிகாரி தலைமையில் 4 காவல் துறையினர், ஒரு புகைப்பட பதிவாளர் ஆகியோர் இடம் பெறுவார்கள். அதேபோன்று நிலையான கண்காணிப்புப் படையில் 4 பேர் இடம் பெறுவர்.

  இவர்கள் முக்கியச் சாலைகளில் சோதனைச்சாவடி அமைத்து வாகனத் தணிக்கையில் ஈடுபடுவது, பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக தகவல் கிடைக்கும் பகுதிகளுக்குச் சென்று திடீர் சோதனையிடுவது, சாலைகளில் திடீர் வாகனத் தணிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai