சுடச்சுட

  

  நிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் கடலூர் பேருந்து நிலையத்தில்  திங்கள்கிழமை விழிப்புணர்வு முகாம்  நடத்தினர்.

  துணைக் கண்காணிப்பாளர் மணி தலைமை வகித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு துண்டறிக்கைகளை விநியோகித்தார். அப்போது அவர் கூறியது: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கட்டாயமாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

  அவ்வாறு பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் விவரங்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பாக, முதலீடாக பணம் வாங்குவதற்கு அதிகாரமுள்ள நிறுவனங்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருக்கும்.

  அந்நிறுவனங்களும் அதிகபட்சமாக 5 ஆண்டு முதிர்வு காலத்திற்கு மட்டுமே டெபாசிட் பெற முடியும். அதிகபட்சமாக ஆண்டுக்கு 12.5 சதவீதம் மட்டுமே வட்டியாக தர முடியும். முதலீடு செய்யப்படும் பணத்துக்கு முறையான ரசீது வழங்க

  வேண்டும்.  அதிகாரப்பூர்வமற்ற நிதி நிறுவனங்கள்  மற்றும் பணச்சுழற்சி திட்டங்கள் நடத்துவோர் பற்றி தகவல் இருந்தால் அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என்றார். முகாமில் காவல் ஆய்வாளர் சுப்பராயலு, உதவி ஆய்வாளர்கள் மீனாள், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai