Enable Javscript for better performance
மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடியில் விரக்தியால் விஷம் குடித்த தாய் உயிரிழந்தார். மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    குறிஞ்சிப்பாடியில் நகை அடகுக் கடை நடத்தி வந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மனைவி உமையாள் (55). இவர்களுடைய மூத்த மகள் ரமா. இவர் கணவர் செந்திலுடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வந்தார்.

    தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் விரக்தி அடைந்த ரவிச்சந்திரன் (58), தனது மனைவி உமையாளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஸ்ரீரங்கம் தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அதே சமயத்தில் மருமகன் செந்திலும் குறிஞ்சிப்பாடியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ரமா, தனது மகன் ஆகாஷ் (13) உடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகன் ஆகாஷூக்கு விஷத்தை கொடுத்து ரமாவும் குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்தவர்களை மீட்டு  குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரமா திங்கள்கிழமை இறந்தார். மகன் ஆகாஷ் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து குறிஞ்சிப்பாடி ஆய்வாளர் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai