Enable Javscript for better performance
வழக்குரைஞர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்களின் மனிதச் சங்கிலி போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    மதுரை, சென்னை நீதிமன்றத்தில் 43 வழக்குரைஞர்கள் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், நீதிமன்றங்களில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய வலியுறுத்தியும் சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் திங்கள்கிழமை பணிகளை புறக்கணித்து வழக்குரைஞர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.

    செயலாளர் வைத்தியநாதன், செல்வக்குமார், செந்தில், மணிகண்டன், ஆண்டணி, மகேஷ், மூர்த்தி, பட்டுராஜன், மணிவண்ணன், சிலம்புச்செல்வன் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai