சுடச்சுட

    

    அஞ்சலகத்தில் மகளிருக்கு சிறப்பு சேவைப் பிரிவு

    By நெய்வேலி  |   Published on : 09th March 2016 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெய்வேலி, வட்டம் 19-ல் உள்ள துணை அஞ்சலகத்தில் மகளிருக்கான சிறப்பு சேவைப் பிரிவு செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

     நிகழ்ச்சிக்கு நெய்வேலி அஞ்சல் உட்கோட்ட ஆய்வாளர் கணேஷ் தலைமை வகித்தார்.   துணை அஞ்சலக தலைமை அதிகாரி கார்த்திகேயன், மக்கள் தொடர்பு ஆய்வாளர் சபாநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பொதுத்துறை நிறுவன பெண்கள் அமைப்பான விப்ஸ் தலைவியும், என்.எல்.சி. கூடுதல் முதன்மை மேலாளருமான வனஜா மகளிருக்கான சிறப்பு சேவைப் பிரிவை திறந்து வைத்தார்.  முதலாவது சுரங்க விரிவாக்க முதன்மை மேலாளர் வித்யாவதி குத்துவிளக்கேற்றி சேவைப் பிரிவு பணிகளை தொடங்கி வைத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai