சுடச்சுட

  

  கடலூர் அரசுக் கல்லூரியில் விலங்கியல்  துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

  தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் (பஅசநஇஏஉ) நிதியுதவியுடன், "விலங்கின அறிவியலின் நவீன போக்கு'  என்ற தலைப்பில் 2 நாள்கள் நடைபெறும் இந்தக் கருத்தரங்கை, கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

  அப்போது அவர் பேசுகையில், விலங்கின அறிவியலின் நவீன உத்திகளின் முக்கியத்துவம், காடு மற்றும் வீடுகளில் வாழும் விலங்குகளின் நடத்தைகள், பாதுகாப்புமுறை மற்றும் பாதுகாப்புச் சட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். 

  இயற்பியல் துறைத் தலைவர் க.மனோகரன் வாழ்த்திப் பேசினார்.

  கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் கு.அருள்தாஸ், விலங்கியல் துறை பேராசிரியர்கள் கு.சின்னதுரை, வினோதா, ஞானாம்பிகை, அருள்ஜோதிசெல்வி, பெரியநாயகி, முனியன், மணிமேகலை, பிரபு ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

  முன்னதாக, விலங்கியல் துறைத் தலைவர் இரா.கண்ணன் வரவேற்க, பேராசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai