சுடச்சுட

  

  குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய மகளிர் தின விழா, கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

  கலைக் கல்லூரி முதல்வர் சேரமான் தலைமை வகித்துப் பேசினார். நிர்வாகக்குழுத் தலைவர் சட்டநாதன் முன்னிலை வகித்தார்.

  கணிதவியல் துறைத் தலைவி செல்வி வரவேற்றார். கல்லூரி பொருளர் ராமலிங்கம், நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கல்வியியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சிவசண்முகநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

  சென்னை  பில்ரோத் மருத்துவமனையின் மனோதத்துவ நிபுணர் மருத்துவர் நான்சி  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பெண்ணின் சிந்தனைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

  மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். கணினித் துறைதலைவி பேராசிரியை நிர்மலா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai