Enable Javscript for better performance
களைகட்டியது சிதம்பரம் நாட்டியாஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

    பொதுதீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பிலும், 35ஆவது ஆண்டாக சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பிலும் என தனித்தனியே நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது.

    நாட்டியாஞ்சலியின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நடராஜர் கோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் கோவை ஸ்ரீஅபிராமி நாட்டியாலயா மாணவிகள், சென்னை சஹானந்தம், தில்லை ஸ்ரீசிவகாமி நாட்டியப் பள்ளி மாணவிகள் உள்ளிட்டோரின் பரத நாட்டியங்கள் நடைபெற்றன.

    ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில்  சென்னை ஸ்ரீகிருஷ்ணா நாட்டியாலயா அகிலா ரமேஷ் குழுவினரின் குச்சுப்புடி நடனம், சிதம்பரம் நிரஞ்சனா ராம்நாத், யுகே.சுகன்யா பாலன் குழுவினர் ஆகியோரின் பரதம் உள்ளிட்டவை நடைபெற்றன. வருகிற 11-ம் தேதி வரை நாட்டியாஞ்சலி நடைபெறும்.

    நாட்டியாஞ்சலியில் இன்று...

    நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா:

    (மாலை 4.30 மணி முதல் புதன்கிழமை இரவு 10 மணி வரை):  சென்னை சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா மாணவிகள், நெல்லை பர்வதா நர்த்தனாலயா மாணவிகள், சிதம்பரம் ஸ்ரீநடராஜா நர்த்தனாலயா மாணவிகள், சிதம்பரம் சித்ரா ஆர்ச் மற்றும் கல்சுரல் அகாதெமி மாணவிகள், நெல்லை சண்முகப்பிரியா லோகநாதன் ஆகியோரின் பரதம், மஹாராஷ்டிரா நிகிதாவின் கதக் நடனம், சிதம்பரம் ஹர்ஷினி ராஜமோகன், மங்கையர்கரசி சுவேதாகுமார், சின்னமனூர் ஏ.சித்ரா ஆகியோரின் பரதம்,  பெங்களூர் ஸ்ரீநிர்த்தியபிரியா ஆலயம் ஆர்ட்ஸ் மாணவிகள், டாக்டர் ரக்க்ஷா கார்த்திக் மற்றும் மாணவர்கள், சென்னை சுசித்ரா, மோனிகா, சிக்கில் வசந்தகுமாரி ஆகியோரின் பரதம்.

    ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெறும் நாட்டியாஞ்சலியில் இன்று:

    (மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை)- பூஜிதா கிருஷ்ணா ஜோதி விலாசினி நாட்டியம்.  பெங்களூர் சங்கீதாமேனன் மோகினி ஆட்டம், புதுதில்லி நளினி கமலினி குழுவினரின் கதக் நாட்டியம், மீனாட்சி சித்ரஞ்சன் பரதம், பெங்களூர் ராதா கல்பா நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai