சுடச்சுட

  

  சாக்குகள் இல்லாததால் நெல் கொள்முதலில் பின்னடைவு

  By கடலூர்  |   Published on : 09th March 2016 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாக்குகள் இல்லாததால் நெல் கொள்முதல் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஜனநாயக அங்காடிகள் சுமை தூக்குவோர் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலர் என்.கணேசன்  வெளியிட்டுள்ள அறிக்கை:  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 120 செயல்பட்டு வருகின்றன.

  இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்கிறது. ஆனால், போதுமான சாக்குகள் இல்லாததால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய முடியாமல் பட்டியல் எழுத்தர்கள் அவதிப்படுகிறார்கள்.

  சாக்குகள் இல்லாததால் ஒரு மாதத்துக்கும் மேலாக நெல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லையும் சாக்குகள் இல்லாததால் எடுத்துச் செல்ல முடியவில்லை. மேலும், கொள்முதல் நிலையங்களில் தார்ப்பாய்கள் இல்லாமல் திறந்த நிலையிலேயே இருப்பதால் திடீரென மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் அதிகளவில் பாதிப்பு ஏற்படும். இந்த இழப்புக்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எனவே, இப்பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai