Enable Javscript for better performance
சொற்பொழிவாளருக்கு ஆன்மிக சுடரொளி பட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவில் சொற்பொழிவாளருக்கு ஆன்மிக சுடரொளி பட்டம் வழங்கப்பட்டது.

     மகா சிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் தில்லை திருமுறை மன்றம் சார்பில் நடராஜர் கோயிலில் சிறப்பு சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

     சு.சந்திரசேகர் தீட்சிதர் தலைமை வகித்தார். ஏ.குருமூர்த்தி தீட்சிதர் முன்னிலை வகித்தார். தொலைக்காட்சி புகழ் கே. சிவக்குமார் ஆளுடை பிள்ளையும், ஆளுடைய அரசும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பின்னர், விழாவில் பொதுதீட்சிதர்கள் சார்பில், சொற்பொழிவாளர் கே.சிவக்குமாருக்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழக விலங்கியல்துறை முன்னாள் துறைத் தலைவர்  கே.வீரராகவன்,  ஆன்மிக சுடரொளி என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டினார்.

      விழாவில் பேராசிரியர்கள் டி.எஸ்.எஸ்.ஞானக்குமார், டி.எஸ்.எஸ்.பாலக்குமார், டி.சிவகுமாரி, ஆசிரியை ஜி.சுந்தரி, டி.பொன்னம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai