சுடச்சுட

  

  திமுக-காங்கிரஸ் கூட்டணி எடுபடாது: அமைச்சர் எம்.சி.சம்பத்

  By கடலூர்  |   Published on : 09th March 2016 07:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களிடம் எடுபடாது என்றார் அமைச்சர் எம்.சி.சம்பத்.

  கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலூர் முதுநகரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

  கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை வகித்துப் பேசியது: கடந்த தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய இயக்கமாக அதிமுக உள்ளது.

  நீண்ட காலமாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுவிக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார். அதன் பின்னர் கருணாநிதி நாங்கள் தான் அதற்கான நடவடிக்கை எடுத்தோம் என்று கூறி வருகிறார்.

  அதேநேரத்தில் காங்கிரஸ் தலைமையில் அமைந்த மத்திய அரசு தான் இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு ஆயுதம் வழங்கியது. அந்த ஆட்சியில் திமுகவும் இடம் பெற்றிருந்தது.

  தற்போது அதே கட்சிகள் தான் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

  மக்கள் நல கூட்டணியால் மக்களை நெருங்கக் கூட முடியாது.

  தன்னை முதல்வர் வேட்பாளர் என்று கூறிக் கொள்ளும் அன்புமணி மீது மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த வழக்கு உள்ளது. மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே என்ற பயணத்தை காலம் கடந்த நிலையில் மேற்கொண்டுள்ளார்.  ஆனால், மாவட்டம் முழுவதும் அரசின் திட்டங்கள் மக்களைச் சேரும் வகையில் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

  கடலூர் பேரவைத் தொகுதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய ஆட்சியர் அலுவலகம், சுங்கச் சாலைத் திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டுள்ளன என்றார். கூட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலர் கே.முருகுமணி, நகரச் செயலர் ஆர்.குமரன்,  நகர கூட்டுறவு சங்கத் தலைவர் டி.ரவிச்சந்திரன், கவுன்சிலர் வ.கந்தன் உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர்.  பேச்சாளர் நாஞ்சில்சம்பத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொரத்தூர் இரா.ராஜேந்திரன், எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், மாவட்ட அவைத் தலைவர் கோ.ஐயப்பன், மருத்துவ பிரிவு துணைச் செயலர் கே.சீனுவாசராஜா ஆகியோர் பேசினர்.

  ஜெயலலிதா பேரவைச் செயலர் பி.ரவிச்சந்திரன், எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் இரா.வெ.பெருமாள்ராஜா, தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், விவசாய பிரிவுச் செயலர் கே.காசிநாதன், மீனவர் பிரிவுச் செயலர் கே.தங்கமணி, ஒன்றியச் செயலர் இராம.பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் ஜி.ஜெ.குமார் வரவேற்க, ஒன்றியச் செயலர் பி.வி.ஜெ.முத்துகுமாரசாமி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai