Enable Javscript for better performance
தேசிய அறிவியல் திறன் தேர்வு: சிதம்பரம் மாணவர் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அறிவியல் திறன் தேர்வு: சிதம்பரம் மாணவர் சிறப்பிடம்

    By சிதம்பரம்  |   Published on : 09th March 2016 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரம் அருகே மணலூரில் உள்ள எடிசன் ஜி.அகோரம் நினைவுப் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவர் பி.பொன்கைலாஷ்ராஜ் .

    தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் திறன் அறியும் தேர்வில் 98 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளார்.

     இந்தத் தேர்வானது மாணவர்கள் எவ்வாறு கருத்துகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுகிறார்கள், மற்றும் அவர்களது திறனை மேலும் அதிகரிக்கச் செய்யும் தேர்வாகவும் ஆண்டு தோறும் யூனிஃபைடு (சநபநஉ) நடத்துகிறது.

      மாணவர் பி.பொன்கைலாஷ்ராஜ் முதலாம் வகுப்பில் இருந்து ஒலிம்பியாட் தேர்வுகளை எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் சிறப்பிடம் பெற்ற இந்த மாணவரை திங்கள்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஷமி ரத்னா, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai