சுடச்சுட

  

  தேர்தல் விதி எதிரொலி: உரிமம் பெற்ற துப்பாக்கிகள் ஒப்படைப்பு

  By கடலூர்  |   Published on : 09th March 2016 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மாவட்டத்தில் உரிமம் பெற்று  துப்பாக்கி வைத்திருந்தவர்கள் அவற்றை  அரசிடம் ஒப்படைத்தனர்.

  சொந்த பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்றவர்கள் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதனை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

  அதன்படி, மாவட்டத்தில் 284 பேர் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் பெற்று 293 துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

  இதில், ஒற்றைக்குழல் துப்பாக்கி 88, இரட்டைக்குழல் துப்பாக்கி 113, பிஸ்டல் 18 அடங்கும்.

  வட்டம் வாரியாக கடலூர் வட்டத்தில் 71 பேரும், பண்ருட்டியில் 42 பேர், குறிஞ்சிப்பாடியில் 36 பேர், சிதம்பரத்தில் 46 பேர், காட்டுமன்னார்கோவிலில் 23 பேர், விருத்தாசலத்தில் 38 பேர், திட்டக்குடியில் 27 பேர், வேப்பூர் வட்டத்தில் ஒருவரும் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி பெற்றுள்ளனர்.

  தற்போது மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இதில், வங்கிப் பணியில் பயன்படுத்தப்படும் 51 துப்பாக்கிகள் தவிர மற்றவைகள் பெறப்படும்.

  அதன்படி, 90 சதவீத துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai