Enable Javscript for better performance
நந்தனார் மட சொத்துகளை பராமரிக்க தனி அதிகாரி நியமிக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    நந்தனார் மட சொத்துகளை பராமரிக்க தனி அதிகாரி நியமிக்க கோரிக்கை

    By சிதம்பரம்  |   Published on : 09th March 2016 07:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிதம்பரத்தில் உள்ள நந்தனார் மட சொத்துகளை பராமரிக்க தனிஅதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என நந்தனார் ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது.

    சிதம்பரத்தில் நந்தனார் ஆய்வு மையம் மற்றும் சுவாமி சகஜானந்தா கல்விக் குழுமம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நந்தனார் ஆய்வு மைய அமைப்பாளர் ரா.காவியச்செல்வன் தலைமை வகித்தார்.  சகஜானந்தா கல்விக்குழும பொருளாளர் மு.ஆ.தமிழ்க்குமரன் வரவேற்றார். நிர்வாகிகள் பொங்கோவில் ஞானசேகரன், கோ.செ.பேரறிவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சகஜானந்தா கல்விக் குழுமச் செயலாளர் எஸ்.பி.ராஜேந்திரன், ஆலோசகர் ரா.ஜவகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். க.ஆதிமூலம், க.தமிழ்மறவன், ஆ.சிவநந்தன், ரா.அறிவுமணி, பாக்கியராசு, இளையநந்தன், தாய்மண் மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சே.மாரிவளவன் நன்றி கூறினார்.

    சகஜானந்தாவுக்கு  சட்டப்பேரவை வளாகத்தில் உருவச்சிலை வைக்க வேண்டும், அவரது பிறந்த நாளான ஜன.27ஐ அரசு விழாவாக கொண்டாட வேண்டும், பள்ளி பாடநூலில் சகஜானந்தா வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டும், தமிழக அரசு நந்தனாருக்கு மணி மண்டபம் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai