சுடச்சுட

  

  பணம் பட்டுவாடா: தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்

  By கடலூர்  |   Published on : 09th March 2016 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் பணம் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு செவ்வாய்க்கிழமை புகார் வரப்பெற்றது.

  பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருள்கள் கொடுப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

   இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் வகையில் 04142-285000, 01,02, 03,04 என்ற தொலைபேசி எண்களை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் அண்மையில் அறிவித்துள்ளார்.

  மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணாக 18004257019 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  மாவட்ட ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அங்கு மேற்கண்ட தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களிடமிருந்து வரும் தொலைபேசி தகவல்களை பதிவு செய்து அதனை உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்க 4 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அதன்படி, செவ்வாய்க்கிழமை மதியம் வரை 2 பேர் புகார் தெரிவித்துள்ளனர். அதில், குறிஞ்சிப்பாடி பகுதியில் அரசு சுவர்களில் எழுதப்பட்டுள்ள விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை என புகார் கூறப்பட்டது.

  மற்றொருவர், கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் ஒருசாராருக்கு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது என்று புகார் தெரிவித்துள்ளார். இந்த 2 புகார்கள் குறித்தும் விசாரிக்க உரிய வட்டாட்சியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai