சுடச்சுட

  

  "பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வேண்டும்'

  By கடலூர்  |   Published on : 09th March 2016 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  தமிழ்நாடு தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்கத்தின் தொடக்க விழாவும், சர்வதேச மகளிர் தின விழாவும் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  சங்கத்தின் தலைவர் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு சிறப்புரையாற்றினர்.

  அனைத்து குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம். மருதவாணன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் கே.டி.சம்பந்தம்,  என்.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்புச் செயலாளர் விக்டர் ஜெயசீலன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  கூட்டத்தில், அனைத்து தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் வழங்க வேண்டும்.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மருத்துவ காப்பீடு ஆகிய சமூக நல பாதுகாப்பு திட்டங்களை அனைவருக்கு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai