சுடச்சுட

  

  கடலூரில் உலக மகளிர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

   காவல் துறை உயரதிகாரிகள் மனைவியர் நலச் சங்கம் சார்பில், காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மகளிர் தின விழாவில், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை பெண் அமைச்சுப் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

   முகாமை காவல் கண்காணிப்பாளர் செ.விஜயக்குமாரின் மனைவி ஆர்.கீதாவாணி தொடங்கி வைத்து தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பேசினார்.

   இதில், 65 பெண்களுக்கு மருத்துவர்கள் என்.வி.சித்திரைச்செல்வி, எஸ்.வேலவன் சிகிச்சை அளித்தனர்.

   மேலும், பேராசிரியர்கள் ஜெயந்தி ரவிச்சந்திரன், ஆரோக்கியமேரி, மருத்துவர் குழந்தைவேலன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் கருத்துரையாற்றினர்.

  இதில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் க.நரசிம்மன், வஹிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பெரியார் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தலைமையில் மகளிர் தின கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எம்.கஸ்தூரி சிறப்புரையாற்றினார்.

   துறைத் தலைவர்கள் ச.கீதாதேவி, ப.ஷர்மிளா இந்திராணி, கா.கீதா, பேராசிரியர்கள் அ.அன்பரசி, ப.கீதா, எஸ்.பி.வினோதா, ராமகிருஷ்ணன்சாந்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

   கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் என்எஸ்எஸ் பிரிவு, கடலூர் அரிமா சங்கம் மற்றும் தி சுசான்லி ஆயுர்வேதிக் மருத்துவமனை சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

   அரிமா சங்கத் தலைவர் கே.ரவி தலைமையில் கல்லூரி முதல்வர் மல்லிகா சந்திரன் முன்னிலையில் விழா நடைபெற்றது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோ.ஷர்மிளா, ஆயுர்வேதிக் மருத்துவர்கள் சி.ஏ.ரவி, உஷாரவி, பேராசிரியர் எஸ்.கல்பலதா ஆகியோர் பேசினர்.

   உழைக்கும் பெண்கள் ஒருங்கினைப்புக்குழு (சிஐடியு) சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூரில் பணியிடங்களில் சம உரிமை, சம வாய்ப்பு கேட்போம் என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

   குழுவின் அமைப்பாளர் ஆர்.பழனியம்மாள், நிர்வாகிகள் கே.சாவித்ரி, எஸ்.சாந்தகுமாரி, கே.மீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கடலூரில், மகளிர் தின விழா மற்றும்  நுகர்வோர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் ஜெயபாரதி தலைமை வகித்தார். நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச்செயலர் எம்.நிஜாமுதீன், பிஎஸ்என்எல் துணைப் பொது மேலாளர் பால்கி, சுற்றுச்சூழல் ஆர்வலர் தி.அருள்செல்வம், மனித உரிமை காப்பாளர் இரா.பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai