Enable Javscript for better performance
மக்கள் நல கூட்டணி வாக்குச் சேகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கடலூரில் மக்கள் நல கூட்டணியினர் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

     மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கடலூர் பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாக்குச் சேகரிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   கடலூர் மக்களவைத் தொகுதிச் செயலர் பா.தாமரைச்செல்வன், மாவட்டச் செயலர் சா.முல்லைவேந்தன், மண்டலச் செயலர் சு.திருமாறன் ஆகியோர் பொதுமக்களைச் சந்தித்து கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையை வழங்கி வாக்குச் சேகரித்தனர்.  வாக்குச் சேகரிப்பில், கடலூர் பேரவை தொகுதிச் செயலர் மு.அறிவுடைநம்பி, செய்தித் தொடர்பாளர் பால.புதியவன், ஒன்றியச் செயலர் மொ.வீ.சக்திவேல், நிர்வாகி தி.ச.திருமார்பன், மதிமுக நகரச் செயலர் கோ.ப.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai