சுடச்சுட

  

  மார்ச் 21 முதல் தொடர் வேலைநிறுத்தம்: என்.எல்.சி. ஒப்பந்ததாரர் நலச் சங்கம் அறிவிப்பு

  By நெய்வேலி  |   Published on : 09th March 2016 07:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்ச் 21ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக என்.எல்.சி. ஒப்பந்ததாரர் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

  நெய்வேலி என்.எல்.சி-ன் மூன்றாம் அனல்மின் நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கொடுத்த அப்பகுதி கிராம மக்களிடம் அத்திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின. இதில் வேலை வாய்ப்பில் 60 சதவீதம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.

  ஆனால், விரிவாக்கத் திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் உறுதி அளித்தவாறு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவில்லையாம். உள்ளூர் ஒப்பந்ததாரர்களுக்கும் வேலை வாய்ப்புகள் அளிப்பதில்லையாம். 

  அதனை அடுத்து என்.எல்.சி ஒப்பந்ததாரர் நலச் சங்கத்தின் தலைவர் பாண்டித்துரை, பொதுச்செயலர் சக்கரவர்த்தி, பொருளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோரிடம் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனர்.

  அந்த மனுவில்,  பல நிறுவனங்கள் வெளி மாநில ஒப்பந்ததாரர்களுக்கு வேலைகளை அளிக்கின்றன. குறைந்த கூலிக்கு அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர்.

  பேச்சுவார்த்தையில் உறுதி அளித்தவாறு 60 சதவீதம் வேலை வாய்ப்பினை முன்னுரிமை அடிப்படையில் ஆட்சியர் பெற்றுத் தர வேண்டும்.

  வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். கட்டுமானப் பணி தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூ.500 வழங்க வேண்டும். வெளிமாநில ஆள்களை பணியில் அமர்த்தக் கூடாது என அதில் தெரிவித்துள்ளனர்.

  இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சார்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றக் கோரி வருகிற 21-3-16 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தினை நடத்த உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai