சுடச்சுட

  

  கடலூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

   தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 19-ம் தேதி எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார்படுத்துதல் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களின் நிலை குறித்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

   இதன்படி, கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் கூறுகையில், கடலூர், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கடலூர் அரசுக் கல்லூரியில் எண்ணப்படுகிறது.

   விருத்தாசலத்தில் விருத்தாசலம், திட்டக்குடி தொகுதியும், சி.முட்லூரில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள், கட்டடத்தின் உறுதித்தன்மை, வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணிக்கை மையத்தில் குடிநீர் வசதி, மின்சாரம், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

   சுவர் விளம்பரங்களை அழிக்காதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.

   ஒரு தொகுதிக்கு தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் காவல் துறையினருடன் சேர்ந்து சோதனை நடைபெறுகிறது என்றார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோ.ஷர்மிளா, கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி, தேர்தல் வட்டாட்சியர் ப.காந்தி, வட்டாட்சியர் அன்பழகன், கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai