சுடச்சுட

  

  வாய்ப்புற்று நோயை குணப்படுத்தும் வேப்பிலை: அண்ணாமலைப் பல்கலை. நிபுணர்கள் தகவல்

  By சிதம்பரம்  |   Published on : 09th March 2016 07:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அனைத்து நோய்களையும் தீர்க்கும் கற்பக மரமாக திகழும் வேப்ப மரத்தின் இலை மற்றும் பூவிலிருந்து எடுக்கப்பட்ட தாவர வேதிப்பொருளான நிம்போலைடூ வாய்ப்புற்று நோயை குணமாக்கும் சக்தி கொண்டது என அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

   இன்றளவில், வாய்ப்புற்று நோய்க்கு பல்வேறு சிகிச்சைகள் இருப்பினும் புற்று நோயாளிகளின் வாழ்நாள் திறன் மிகவும் குறைவாகவே உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம், உயிர் வேதியியல் மற்றும் உயிர் தொழில் நுட்பவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் நாகினி மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவானது வெள்ளெலியை பயன்படுத்தி வாய்ப்புற்று நோயின் போது ஏற்படும் தோலிமம் மாற்றத்தை விளக்கி உள்ளனர்.

   இந்த ஆராய்ச்சிக் குழுவினர், நிம்போலைடூ புற்று நோய் செல்லை கொல்வதன் மூலமும் மற்றும் அதன் வளர்ச்சிப் பெருக்கத்தை தடுப்பதின் மூலமும் வாய்ப்புற்று நோயை தடுப்பதாக நிரூபித்துள்ளனர்.

    இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரையானது நஸ்ரீண்ங்ய்ற்ண்ச்ண்ஸ்ரீ ழ்ங்ல்ர்ழ்ற்ள் எனும் ஆராய்ச்சி பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது.  இந்த ஆராய்ச்சி முடிவில், வேப்பிலையின் புற்று நோய் எதிர்ப்பு செயல்பாடு குறித்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மனித மருத்துவ சோதனையின் பின் நிம்போலைடூ வாய்ப்புற்று நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தத்தக்கது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai