சுடச்சுட

  

  மாவட்டத்தில் 189 தேர்தல் மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழு உள்ளிட்ட படைகள் அமைக்கப்பட்டு பணப் புழக்கம் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

  மேலும், காவல் துறையினருடன் இணைந்து இக்குழுவினர் வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

  இந்நிலையில் தேர்தல் பணிகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் குறைந்தபட்சம் 10 வாக்குச்சாவடி மையங்களை உள்ளடக்கி, அவற்றை கண்காணிக்கும் வகையில் மண்டல தேர்தல் அலுவலர்கள் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

  இவர்கள், வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள், தேவையான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வார்கள்.  பின்னர், தேர்தல் நேரத்தில் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல்  முதல் வாக்குப் பெட்டியினை சீல் வைக்க பயன்படுத்தப்படும் நூல் முதலான பொருள்களை சேகரித்து தங்களது கட்டுப்பாட்டிலுள்ள மையங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.  வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னர் வாக்குப் பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி அதனை வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பு இந்த மண்டல அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலர் பதவியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  சார்-பதிவாளர்கள் அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  இதன்படி, மாவட்டத்தில் 189 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோ.ஷர்மிளா, தேர்தல் வட்டாட்சியர் ப.காந்தி ஆகியோர் தெரிவித்தனர்.

  தொகுதி வாரியாக திட்டக்குடியில் 21, விருத்தாசலம் 22, நெய்வேலி 18, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி தலா 21, கடலூர் 19, புவனகிரி 24, சிதம்பரம் 20, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 23 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள

  னர்.  இவர்களுக்கு உதவியாக மண்டல உதவியாளர்கள், காவல் துறையினரும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai