Enable Javscript for better performance
தேர்தல் பறக்கும் படை, நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பறக்கும் படை, நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம்

    By நெய்வேலி  |   Published on : 10th March 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலைக்குழு ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், பறக்கும் படை மற்றும் நிலைக்குழு செய்ய வேண்டிய பணிகள் குறித்துப் பேசியது:

    பறக்கும் படை மற்றும் நிலைக்குழு தேர்தல் தொடர்பான அனைத்து நன்னடத்தை நெறிமுறை தொடர்பான புகார்களையும் கவனிக்க வேண்டும். சமூக விரோத நடவடிக்கைகள், மிரட்டல் தொடர்பான புகார்கள், மதுபானங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்

    வாக்காளர்களுக்கு வழங்குவதற்கான பணம் மற்றும் பொருள்கள் குறித்து கண்காணிக்க வேண்டும்.

    புகார்கள் வரும் வேளையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்தேக பணம் மற்றும் பொருள்களை பறிமுதல் செய்து, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க வேண்டும். பொதுக்கூட்டம், பிரசாரக் கூட்டங்களை விடியோ பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பறக்கும்படை அமைக்கவும், பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ள தொகுதிகளில் மத்திய அல்லது மாநில காவல் படையினரை பணியில் அமர்த்தவும் வேண்டும்.

    புகார்கள் குறித்து 24 மணி நேரமும் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனக் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சர்மிளா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai