சுடச்சுட

  

  பல்கலை. முன்னாள் மாணவர்கள் கட்டிக் கொடுத்த கட்டடங்கள் திறப்பு

  By சிதம்பரம்,  |   Published on : 10th March 2016 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை.யில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடம், பயிற்சி அரங்கம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.

  அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் 1975-ல் பயின்ற முன்னாள் மாணவர்களால், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வேதிப்பொறியியல் துறையில் நவீன மயமாக்கப்பட்ட பால்பொருள் இயக்கவியல் ஆய்வுக்கூடம் ரூ. 5 லட்சத்தில் நவீன மயமாக்கப்பட்ட வேலை அமர்வு மற்றும் பயிற்சி அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டன. இவற்றை துணைவேந்தர் செ.மணியன் திறந்து வைத்தார்.

  நிகழ்ச்சியில் 1975ல் பயின்ற முன்னாள் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். பதிவாளர் க.ஆறுமுகம், பொறியியல் புல முதல்வர் செ.அந்தோணிஜெயசேகர் முன்னிலை வகித்தனர்.

  விழா ஏற்பாடுகளை வேதிப்பொறியியல் துறைத் தலைவர் வே.விஜயகோபால், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி இரா.பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் அனைத்துத் துறைத் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai