Enable Javscript for better performance
பிரசாரத்துக்கு: ஆன்-லைனில் அனுமதி பெறலாம்:கோட்டாட்சியர் விஜயலட்சுமி- Dinamani

சுடச்சுட

    

    பிரசாரத்துக்கு: ஆன்-லைனில் அனுமதி பெறலாம்:கோட்டாட்சியர் விஜயலட்சுமி

    By சிதம்பரம்  |   Published on : 10th March 2016 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் பொதுக்கூட்டம், பிரசாரம், பேரணி உள்ளிட்டவை குறித்து அரசியல் கட்சிகள் ஆன்-லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும் என சிதம்பரம் கோட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பி.எஸ்.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

    தேர்தல் குறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி தலைமை வகித்துப் பேசினார்.

    அப்போது அவர் கூறியது: தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அரசியல் கட்சிகள் ஆன்-லைன் மூலம் தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும்.

    மேலும், தேர்தல் விதிமுறைகளை கட்சிகள் பின்பற்ற வேண்டும்.

    கண்காணிக்க சிதம்பரம் கோட்டத்தில் 3 கண்காணிப்புப் படைகளும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

    கூட்டத்தில் ஏ.எஸ்.மதியழகன் (திமுக), ஆர்.பாலு, சி.க.விஜயகுமார் (தேமுதிக), கே.நாகராஜன் (அதிமுக), எஸ்.ஜி.ரமேஷ்பாபு (மார்க்சிஸ்ட்), பாலகிருஷ்ணன் (பாஜக) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai