Enable Javscript for better performance
பொற்கொல்லர் அங்கீகாரச் சான்றிதழை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பொற்கொல்லர் அங்கீகாரச் சான்றிதழை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை

    By சிதம்பரம்,  |   Published on : 10th March 2016 03:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கலால்துறை மூலம் தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் போது வழங்கப்பட்ட பொற்கொல்லர் அங்கீகார சான்றிதழை மத்தியஅரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்கம் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இச்சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமை வகித்துப் பேசினார்.

    ஆலோசகர்கள் எம்.கோவிந்தராஜ், டி.ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் எஸ்.ராஜ்குமார் வரவேற்றார். இளைஞரணிச் செயலாளர் எஸ்.ரமேஷ், தொழிற்சங்கச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், பொருளாளர் கு.சுந்தரேசன், எம்.பாலசுப்பிரமணியன், ஆர்.உமாபதி, எம்.சுரேஷ், கே.ரவிக்குமார், ஆர்.ராமு, ஆர்.தில்லைநடராஜன், ஜி.முருகன், எஸ்.செந்தில், ஆர்.சிவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர். ஜி.சாமிநாதன் நன்றி கூறினார்.

    தீர்மானங்கள்: தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்றச் சங்க மாநில பொதுக்குழுவை விரைவில் சிதம்பரத்தில் நடத்துவது. வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது, விஸ்வகர்மா விருது வழங்குவது குறித்து அக்கூட்டத்தில் முடிவு செய்வது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai