Enable Javscript for better performance
வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே கரிவெட்டி கிராமத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை அப்பகுதி மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

    அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் கரிவெட்டி, கத்தாழை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் இப்பகுதியில் முதல்கட்டமாக வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக நிவாரணத் தொகை வழங்க கணக்கெடுக்கப்பட்டு விரைவில் வழங்குவதாக அறிவித்தும் இதுவரை வழங்கப்படவில்லையாம்.

    இதனைக் கண்டித்து பாமக கிளைச் செயலாளர் வெற்றிவேல் தலைமையில் கிராம மக்கள் நூறு பெண்கள் உள்ளிட்ட 200 பேர் புதன்கிழமை புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டாட்சியர் நசீர்இக்பால் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் 5 நாள்களுக்குள் நிவாரணத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai