18-இல் நெய்வேலியில் தர்னா: சிஐடியூ முடிவு
By நெய்வேலி | Published on : 10th March 2016 03:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 18ஆம் தேதி நெய்வேலி கியூ பாலம் அருகே தர்னா போராட்டம் நடத்துவது என சிஐடியூ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நெய்வேலியில், சிஐடியூ தொழிற்சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தலைவர் ஏ.வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் குப்புசாமி, சிஐடியூ பொருளர் எம்.சீனுவாசன், துணைத் தலைவர் எஸ்.திருஅரசு, சொசைட்டித் தலைவர் எம்.மீனாட்சிநாதன் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலர் டி.ஜெயராமன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள 3 சுரங்கங்களில் மேல்மண் மற்றும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை தனியாருக்கு விடக்கூடாது.
அனல் மின்நிலையம் விரிவாக்கம் (500 மெகாவாட்) தொடங்கியது முதல் முழு உற்பத்தி நடைபெறவில்லை. 50 சதவீத உற்பத்திக்கு மேல் இயக்கினால் பழுதாகிவிடுகிறது.
இதற்கான காரணத்தை கண்டுபிடித்து முழு உற்பத்திக்கு வழிவகுக்க வேண்டும். பறிக்கப்பட்ட உரிமைகளான சி.ஆஃப், 6 நாள் அபராத ஊதியம் பிடித்தம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 16, 17 தேதிகளில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய வாயில்களில் கூட்டம் நடத்துவது, மார்ச் 18ஆம் தேதி கியூ பாலம் அருகே தர்னா போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.