சுடச்சுட

  

  அஞ்சலகத்தில் மகளிருக்கு சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் ச.சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடலூர், சிதம்பரம் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் நெய்வேலி வட்டம் 19-ல் உள்ள அஞ்சலகத்திலும் மகளிருக்கான சிறப்புப் பிரிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  அந்த பிரிவு கவுன்ட்டரில் மகளிருக்கு மட்டுமான அஞ்சல் சேவைகள் மற்றும் புதிய கணக்கு தொடங்குவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்படும்.

   இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத் திட்டம், பொன்மகன் பொது வைப்புநிதித் திட்டம் மற்றும் பிற சேவைகளை பெற்று பயனடையலாம்.

  மேலும், ஏடிஎம் அட்டை கேட்டு  விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக அட்டை வழங்க நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மகளிர் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai