சுடச்சுட

  

  அரசுப் பேருந்தில் கடத்தப்பட்ட 13 உடும்புகள் பறிமுதல்: ஒருவர் கைது

  By கடலூர்  |   Published on : 11th March 2016 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரத்திலிருந்து ஓசூருக்கு அரசுப் பேருந்தில் உடும்புகளை கடத்திச் சென்றதாக வனத் துறையினர் புதன்கிழமை ஒருவரைக் கைது செய்தனர்.

  சிதம்பரத்திலிருந்து பெங்களூர் செல்லும் அரசுப் பேருந்தில் உடும்பு கடத்தப்படுவதாக கடலூர் மாவட்ட வன அலுவலர் ஏ.செளந்திரராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வன அலுவலர் தலைமையிலான படையினர் பண்ருட்டி பகுதியில் புதன்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

  அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் அமர்ந்திருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளியைச் சேர்ந்த மகபூபை (60) பிடித்து சோதனை நடத்தினர். அவர் வைத்திருந்த சாக்குப் பையில் 13 உடும்புகள் இருப்பது தெரிய வந்தது.

  இதையடுத்து, அவரை வனத் துறையினர் கைது செய்தனர்.

  இதுகுறித்து வன அலுவலர் ஏ.செளந்திரராஜன் கூறியது:

  கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிக்கப்பட்ட உடும்புகளை கிலோ ரூ.300-க்கு வாங்கி அதனை ஓசூருக்கு கடத்திச் செல்கின்றனர். அங்கு உடும்பை சமையல் செய்து, பாலியல் தொடர்பான பிரச்னைகள் தீர உகந்தது எனக் கூறி, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

  பறிமுதல் செய்யப்பட்ட உடும்புகள் காப்புக் காடுகளில் விடப்படும். உடும்புகளைப் பிடித்து விற்பனை செய்வதும், அதை சமைத்து சாப்பிடுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் 3 ஆண்டுகள் முதல் 6 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai