சுடச்சுட

  

  காவல் துறையினருக்கு தபால் வாக்கு: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

  By கடலூர்  |   Published on : 11th March 2016 06:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்டப் பேரவைத் தேர்தலில் காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வழங்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  அக்கட்சியின் கடலூர் மாவட்டக்குழுக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் பி.பாலு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம்.சேகர் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளிலும் மக்கள் நலக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம், தெருமுனைப் பிரசாரம் நடத்தி வாக்குகள் சேகரிப்பது.

  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முழு ஆதரவை தெரிவிப்பது.

  தேர்தலில் பணிகளில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை வழங்குவதைப் போல் காவல்துறை மற்றும் அரசுப் போக்குவரத்துத் துறைகளில் பணியாற்றுபவர்களும் வாக்கினைச் செலுத்தும் வகையில் தபால் வாக்கு வழங்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியினரை தேசத் துரோகிகள் எனக்கூறிய பாஜகவின் எச்.ராஜாவை வன்மையாகக் கண்டிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

   கூட்டத்தில், வட்டச் செயலர்கள் ப.ஜெகரட்சகன், ஆர்.சக்திவேல், கே.கலியபெருமாள், ஏ.ராஜீ, பி.ஜெயின்ராம், நகரச் செயலர்கள் என்.ராமமூர்த்தி, எஸ்.டி.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடலூர் நகரச் செயலர் ஜி.மணிவண்ணன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai