Enable Javscript for better performance
கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: கொத்தனார் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: கொத்தனார் கைது

    By நெய்வேலி  |   Published on : 11th March 2016 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக, கொத்தனாரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

    குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தென்குத்து கிராமம் வடக்குத் தெருவில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. புதன்கிழமை அதிகாலை கோயிலில் இருந்து சப்தம் வந்ததை அடுத்து, கிராம மக்கள் சிலர் எழுந்து வந்து பார்த்துள்ளனர்.

     அப்போது, மர்ம நபர் ஒருவர் கோயிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணம் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து கிராம மக்கள் மர்ம நபரைப் பிடித்து நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

     போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், குறிஞ்சிப்பாடி, மீனாட்சிப்பேட்டை காலனியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் ராமு (32) என்பதும், இவர் காஞ்சிபுரம் சம்மஞ்சேரி பகுதியில் கொத்தனார் வேலை செய்ததும் தெரியவந்ததாம்.

    செலவுக்காக கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடியதை ஒப்புக்கொண்டாராம்.

    இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து ராமுவைக் கைதுசெய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai