சிதம்பரம் நாட்டியாஞ்சலி 4ஆம் நாள் விழா
By சிதம்பரம் | Published on : 11th March 2016 06:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மகா சிவராத்திரியையொட்டி, சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றன.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவும், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 35ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவும் மார்ச் 7ஆம் தேதி தனித்தனியாக தொடங்கின. வெள்ளிக்கிழமை (மார்ச் 11) வரை தொடர்ந்து 5 நாள்கள் நாட்டியாஞ்சலி விழா நடைபெறுகிறது.
விழாவின் 4ஆம் நாள் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. நடராஜர் கோயிலில் சிங்கப்பூர் ஷிரஜாகோவிந்த், சென்னை ஸ்ரீநிகிதன் பைன் ஆர்ட்ஸ் மாணவர்கள், புதுச்சேரி ஸ்ரீநன்தினி நாட்டியாலயா மாணவர்கள், புதுச்சேரி ஸ்ரீசரவணன் அருள் நாட்டியாலயா மாணவர்கள் உள்ளிட்டோர் நடனமாடினர்.
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்தில் பெங்களூர் நிருத்ய ப்ரகாச வர்ஷினி பள்ளி மாணவர்கள், சென்னை டாக்டர் உமா ஆனந்த் மாணவிகளின் சிவார்ப்பணம் என்ற பரதம் உள்ளிட்டோர் நடனமாடினர்.
நாட்டியாஞ்சலியில் இன்று...
நடராஜர் கோயில் (மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை): கடலூர் அன்னை சுப்பம்மாள் நாட்டியாலயா மாணவர்கள், சென்னை விவேதிதா வெங்கட், சென்னை நிர்த்யம் பைன் ஆர்ட்ஸ் சித்ரா ஸ்ரீசினுவாசன் மாணவர்கள், சென்னை ஸ்ரீகிருஷ்ணா நாட்டியாலயா மாணவர்கள், மலேசியா தாமினி மாணிக்கம் ஆகியோரின் பரதம், பெங்களூர் ப்ரதிக்காசி, வைஜெயந்திகாசி ஆகியோரின் குச்சுப்புடி நடனம், மும்பை நந்தினி அசோக் பரதம், மும்பை சொப்பனா கல்ப்பாதாஸ் குப்தா, பூசலிமுகர்ஜி ஆகியோரின் ஒடிசி நடனம், கொள்ளம் நீலமனம் சகோதரிகள் திரஸ்ரீளபதிப்ரவீன், பத்மினி கிருஷ்ணன், லாவண்யா ஆனந்த், ஜெய்கிஷோர் மத்தல்லகண்டி ஆகியோரின் பரதம் மற்றும் குச்சுப்புடி, சென்னை தன்யவர்ஷினி முரளி, சிக்கல் வசந்தகுமாரி, புதுச்சேரி டி.சி.காயத்ரி, பக்தன் வைத்தியநாதன், ஜெயஸ்ரீநாராயணன் ஆகியோரின் பரதம்.
ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகம் (மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை): சிதம்பரம் அகிலா பழனியின் திருமுறை இசை, கலைவாணி நாத நாட்டியாலயா கோமதி மாணவிகளின் பரதம், ஹைதராபாத் சிவச்சந்திரா குச்சுப்புடி நடனம், கொல்கத்தா சுமன் சாரவாகி குழுவினரின் மணிப்புரி நடனம், அடாசி மிஸ்ராவின் ஒடிசி நடனம், டாக்டர் மஹ்வா முகர்ஜி குழுவினரின் கௌடிய நிருத்யம் நடனம், திருமலை சமுத்திரம் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்களின் பரதம்.