சுடச்சுட

  

  சிதம்பரத்தில் மூப்பனார் பேரவை, ஜி.கே.வாசன் நற்பணி இயக்கம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சுரேஷ்மூப்பனாரின் 52ஆவது பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

  இதையொட்டி சிதம்பரம் மந்தகரை செல்லியம்மன் கோயிலில் செடல் காவடி எடுத்து, அக்னிச்சட்டி ஏந்தி, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மூப்பனார் பேரவை பொதுச் செயலர் ஜெமினி எம்.என்.ராதா தலைமை வகித்தார். வாசன் நற்பணி இயக்க பொதுச் செயலர் எஸ்.முத்துகுமார் வரவேற்றார்.

   தமாகா மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா சம்பத்குமார், எஸ்.கே.வைத்தி, பொதுச் செயலர் நாகராஜ், நகர துணைத் தலைவர்கள் ஆறுமுகம், ஆட்டோ குமார் முன்னிலை வகித்தனர்.

  கடலூர் மத்திய மாவட்ட தமாகா தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் கேக் வெட்டி, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.

  மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் மரக்கன்றுகள் நட்டார். மாவட்ட இளைஞரணித் தலைவர் கே.ரஜினிகாந்த் இனிப்பு  வழங்கினார்.

   வாசன் நற்பணி இயக்க நிறுவனர் எஸ்.முத்துகுமார் தனது உடலில்  அலகு இட்டு செடல் காவடி எடுத்தார். நற்பணி இயக்கச் செயலர்  செல்வகுமார், செந்தில்குமார், ரமேஷ், செல்வம், ரகு, ராஜ், விக்கி ஆகியோர் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

  விழாவில் மாவட்ட தொண்டரணித் தலைவர் கோ.குமார், மாவட்ட துணைத் தலைவர் பி.கே.காந்தி, பொதுச் செயலர் பாபு சந்திரசேகர், நகர பொருளர் ஆபித் உசேன், நகர துணைத் தலைவர்கள் இளங்கோவன், பட்டாபிராமன், குமார் இன்பரசு, செயலர்கள் ஆலா தினேஷ் குமார், முருகன், மாநில எஸ்சி, எஸ்டி பிரிவு செயலர் பாலா, மாநில இளைஞரணிச் செயலர் கார்த்திக், கிஷோர், மாவட்ட மாணவரணி தலைவர் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி செயலர் கணேஷ், சாய் முரளி, நகர இளைஞரணித் தலைவர் சிங்கார வேலு, மாநில மகளிரணிச் செயலர் சந்தானமேரி, மாவட்ட மகளிர் அணி தலைவர் ராஜலட்சுமி, மாவட்டச் செயலர் செல்வி சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநில சிறுபான்மை அணிச் செயலர் ஸ்டீபன் முத்துபாண்டி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai