Enable Javscript for better performance
தேசிய அறிவியல் கருத்தரங்கில் 200 ஆய்வுக் கட்டுரைகள்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அறிவியல் கருத்தரங்கில் 200 ஆய்வுக் கட்டுரைகள்

    By கடலூர்  |   Published on : 11th March 2016 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் அரசு கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் கருத்தரங்கில் 200 ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.

    கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள பெரியார் அரசு கல்லூரியின் விலங்கியல் துறை சார்பில், தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றத்தின் (பஅசநஇஏஉ) நிதி உதவியுடன் விலங்கின அறிவியலின் நவீன போக்கு  என்ற தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கம் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெற்றது.

    கருத்தரங்கின் நிறைவு விழாவுக்கு கல்லூரி முதல்வர் வ.நா.விஸ்வநாதன் தலைமை வகித்தார். விலங்கியல் துறைத் தலைவர் ரா.கண்ணன் கருத்தரங்கு பற்றி விளக்கம் அளித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின பேராசியர்கள் கலைச்செல்வன், சீனிவாசன், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் சந்தானம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

     கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்தனர். அதில், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

     கருத்தரங்கில் விலங்கியல் துறைப் பேராசிரியர் கு.சின்னதுரை வரவேற்க, ஒருங்கிணைப்பாளர் கு.அருள்தாஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai