சுடச்சுட

    

    நகை வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலிக்க வணிகர் சங்கம் வலியுறுத்தல்

    By நெய்வேலி  |   Published on : 11th March 2016 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நகை வியாபாரிகளின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து அந்த அமைப்பின் கடலூர் மண்டலத் தலைவர் டி.சண்முகம், செயலர் வி.வீரப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

    புதிய கலால் வரியை ரத்து செய்யக்கோரி நகை வியாபாரிகள் சங்கத்தினர் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  மார்ச் 17ஆம் தேதி வரை கடையடைப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். இதனை மத்திய அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது.

     தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 12 சதவீதம், தமிழக அரசின் வாட் வரி ஒரு சதவீதம், இதற்குமேல் ஒரு சதவீதம் கலால் வரி என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை கூடுதலாகிறது. வரி விதிப்பால் தங்க நகை தயாரிக்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே, மத்திய அரசு நகை வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலித்து கலால் வரியை நீக்க வேண்டும்.   இல்லையெனில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழகத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களையும் இணைத்து நகை வணிகர்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதில் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai