Enable Javscript for better performance
பணம் கடத்தப்படுவதாகத் தகவல்: போலீஸார் கண்காணிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பணம் கடத்தப்படுவதாகத் தகவல்: போலீஸார் கண்காணிப்பு

    By கடலூர்  |   Published on : 11th March 2016 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாகனத்தில் பெட்டி, பெட்டியாக பணம் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் வியாழக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாகன தணிக்கையிலும் வருவாய்த் துறையினருடன் இணைந்து போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல்நிலையத்துக்கு வியாழக்கிழமை ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில், மதுரையில் இருந்து சென்னைக்கு உதிரிபாகம் ஏற்றி வரும் வாகனத்தில் 40 பெட்டிகளில் பல கோடி ரூபாய் பணம் வருவதாக தகவல் தெரிவித்தனர்.

     இத்தகவல் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வி.ஜவஹருக்கு தெரிவிக்கப்பட்டு, அவரது தலைமையில் திட்டக்குடி வட்டாட்சியர் ரவிச்சந்திரன், காவல்  துணைக் கண்காணிப்பாளர் பாண்டியன் உள்ளிட்டோர் ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

     அப்போது அடையாளம் கூறப்பட்ட வாகனத்தை மடக்கி சோதனையிட்டனர். சோதனையில், அந்த வாகனம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான உதிரிபாகம் ஏற்றிவரும் வாகனம் எனத் தெரியவந்தது. அந்த வாகனத்தை மதுரையை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஓட்டிவந்தார். அவரின் நண்பர் ஜெயசீலன் என்பவரும் வாகனத்தில் உடனிருந்தார். அந்த வாகனத்தில் ஓய்வு பெற்ற அலுவலருக்குச் சொந்தமான சில பதிவேடுகள் மட்டுமே இருந்ததால் குழுவினர் ஏமாற்றமடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai