Enable Javscript for better performance
மக்கள் நலக் கூட்டணி ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில், சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி பரப்புரையில் ஈடுபடுவது மற்றும் கூட்டணியின் வெற்றிக்கான வழிமுறைகள் குறித்து  ஆலோசனை நடத்தினர்.

     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் டி.மணிவாசகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலர் சு.திருமாறன், கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் பேசினர்.

     விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மு.அறிவுடைநம்பி, பால.புதியவன், பெ.பாவாணன், மொ.வீ.சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் வி.சுப்புராயன், கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலர் வி.குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai