சுடச்சுட

    

    சீத்தாராம் யெச்சூரி மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் நெய்வேலியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெய்வேலி நகரச் செயலர் எஸ்.திருஅரசு தலைமை வகித்தார்.

    மாவட்டக் குழு குப்புசாமி, ஜெயராமன், நகரக் குழு சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் சிறப்புரையாற்றினார்.

    மாவட்ட செயற்குழு முத்துவேல், மாவட்டக் குழு வேல்முருகன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

     கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறியும், வழங்கை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தியும் பேசினர்.

    மேலும், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஏழை மக்கள், விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை என்றும், இந்து மதவாதத்துக்கு ஆதரவான செயல்பாட்டைக் கண்டிப்பதாகவும் கூறியும் முழக்கமிட்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai