சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே அனுமதியின்றி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.1.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் பேருந்து நிறுத்தம் பகுதியில், கடலூர் சாலையில் கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி, பறக்கும்படை அதிகாரி மோகன்ராஜ் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த, நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா இளந்திரைசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (46) என்பவரது காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில்,  உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்ததாம்.

    இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai