Enable Javscript for better performance
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு- Dinamani

சுடச்சுட

    

    மகா சிவராத்திரியையொட்டி சிதம்பரத்தில் 5 நாள்களாக நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி, வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் நாட்டியாஞ்சலி விழாவும், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 35ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவும் மார்ச் 7ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 5ஆம் நாள் மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    இதில், நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலியில் கடலூர் அன்னை சுப்பம்மாள் நாட்டியாலயா மாணவர்கள், சென்னை விவேதிதா வெங்கட், சென்னை நிர்த்யம் பைன் ஆர்ட்ஸ் சித்ரா ஸ்ரீசீனுவாசன் மாணவர்கள், சென்னை ஸ்ரீகிருஷ்ணா நாட்டியாலயா மாணவர்கள், மலேசியா தாமினி மாணிக்கம் ஆகியோரின் பரதம், பெங்களூர் ப்ரதிக்காசி, வைஜெயந்திகாசி ஆகியோரின் குச்சுப்புடி நடனம், மும்பை நந்தினி அசோக் பரதம், மும்பை சொப்பனா கல்ப்பாதாஸ் குப்தா, பூசலிமுகர்ஜி ஆகியோரின் ஒடிசி நடனம், கொள்ளம் நீலமனம் சகோதரிகள் திரௌபதி ப்ரவீன், பத்மினி கிருஷ்ணன் மற்றும் லாவண்யா ஆனந்த், ஜெய்கிஷோர் மத்தல்லகண்டி ஆகியோரின் பரதம் மற்றும் குச்சுப்புடி, சென்னை தன்யவர்ஷினி முரளி, சிக்கல் வசந்தகுமாரி, புதுச்சேரி டி.சி.காயத்ரி, பக்தன் வைத்தியநாதன், ஜெயஸ்ரீ நாராயணன் ஆகியோரின் பரதம் நடைபெற்றது.

    ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் சிதம்பரம் அகிலா பழனியின் திருமுறைஇசை, கலைவாணி நாத நாட்டியாலயா கோமதி மாணவிகளின் பரதம், ஹைதராபாத் சிவச்சந்திராவின் குச்சுப்புடி நடனம், கொல்கத்தா சுமன் சாரவாகி குழுவினரின் மணிப்புரி நடனம், அடாசி மிஸ்ராவின் ஒடிசி நடனம், டாக்டர் மஹ்வா முகர்ஜி குழுவினரின் கௌடிய நிருத்யம் நடனம், திருமலை சமுத்திரம் சாஸ்த்ரா பல்கலைக்கழக மாணவர்களின் பரதம் நடைபெற்றது.

    ராஜாசர் அண்ணாமலை செட்டியார் அறக்கட்டளை வளாகத்தில்  நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிறைவு விழாவுக்கு, ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தார். ஏ.சம்பந்தம் வரவேற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர்.

    விழாவில் துணைத் தலைவர் வி.பாலதண்டாயுதம், செயலர் ஏ.சம்பந்தம், இணைச் செயலர் ஆர்.நடராஜன், பொருளர் ஆர்.ராமநாதன் மற்றும் உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி,  ஆர்.முத்துக்குமரன், ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai