சுடச்சுட

  

  திருமண மண்டபங்களில் தங்குவோர் விவரம் தெரிவிக்க அறிவுறுத்தல்

  By சிதம்பரம்  |   Published on : 12th March 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருமண மண்டபங்களில் தங்குவோர் குறித்து  மண்டப உரிமையாளர்கள் தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என சிதம்பரம் கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

  சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு தலைமை வகித்து, கோட்டாட்சியர் பி.எஸ்.விஜயலட்சுமி பேசியதாவது: அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரம், வாக்குறுதிகள் குறித்து துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவைகளை அச்சிட்டால் அதன் நகலை அச்சக உரிமையாளர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வழங்க வேண்டும். அதேபோல் கேபிள் டிவி ஆபரேட்டர்களும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் குறித்து தேர்தல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

  திருமண மண்டப உரிமையாளர்கள் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் குறித்தும், நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து தங்கினாலும் உடனடியாகத் தகவல் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

  கூட்டத்தில் அச்சக உரிமையாளர்கள் மணிவண்ணன், வி.என்.மூர்த்தி, கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கர், முத்து, திருமண மண்டப மேலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai