சுடச்சுட

  

  நெய்வேலியில் பங்குனி உத்திர விழா நாளை தொடக்கம்

  By நெய்வேலி  |   Published on : 12th March 2016 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெய்வேலியில் உள்ள பழைமையான, பிரசித்திபெற்ற வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

  இக்கோயிலில் முருகன் வில்லுடன் காட்சி அளிப்பதால், வில்லுடையான்பட்டு எனவும் அழைக்கப்படும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

  இதன்படி இந்த ஆண்டுக்கான விழா ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 13) விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

  விழாவில், 14ஆம் தேதி கொடியேற்றம், பஞ்சமூர்த்திகள் உற்சவம், 15ஆம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்தில் உலா, 16-ல் மயில் வாகனம், 17-ல் ரிஷப வாகனம், 18-ல் தெருவடைத்தான், 19-ல் முத்துரதம், 20-ல் முத்து இந்திரவிமானத்தில் உலா நடைபெறும். 

  21-ல் திருக்கல்யாணம் மற்றும் முத்துப் பல்லக்கு உற்சவம், 22-ல் திருதேர் உலா, 23-ல் பங்குனி உத்திரம் (காவடி அபிஷேகம்), 24-ல் தெப்ப உற்சவம், 25-ல் விடையாற்றி உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

  ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் எம்.பழனி, அறங்காவலர்கள் டி.சுந்தரமூர்த்தி, டி.ஞானசேகரன், ஆர்.மோகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai