பண்ருட்டியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்
By நெய்வேலி | Published on : 12th March 2016 05:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பண்ருட்டி நகரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் நிலவுகிறது.
பண்ருட்டி நகரம் வணிகத்துக்குப் பெயர் பெற்றது. இங்கு, முந்திரி ஏற்றுமதி தொழில் பிரதானமாக உள்ளதால் நகரில் பெரும்பாலான நேரங்களில் மக்கள் கூட்டமும், வாகன நெரிசலும் அதிகமாக இருக்கும். இங்குள்ள முக்கிய வீதிகளில் மளிகை, தங்க நகை, ஜவுளி உள்ளிட்டக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நகரில் பிரசித்தி பெற்ற கோயில்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன.
ஆனால், பண்ருட்டி நகரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. மாடுகளை வளர்ப்போரில் சிலர் அவற்றை கட்டிவைத்து பராமரிக்காமல் அவிழ்த்து விட்டுவிடுவதாகவும், இதனால் மாடுகள் சாலையில் சுற்றித்திரிந்து, விபத்துக்கு வழிவகுப்பதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க நகர நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.