சுடச்சுட

  

  தேர்தலில் 100 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கையெழுத்து இயக்கம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கடலூரில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை புதிய வாக்காளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.சுரேஷ்குமார் வழங்கினார். மேலும், இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்துதலுக்கு ஏற்ப அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்டத்தில் பல்வேறு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்கள், பெண்கள் குறிப்பாக இளம் வாக்காளர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதன் ஒரு பகுதியாக, கையெழுத்து இயக்கம் அனைத்துத் தொகுதிகளிலும் நடைபெறும். கடலூர் மாவட்டத்தில் அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து 100 சதவீதம் வாக்களிக்கப்பட்ட மாவட்டம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

   நிகழ்ச்சியில் கடலூர் கோட்டாட்சியர் என்.உமாமகேஸ்வரி, வட்டாட்சியர் அன்பழகன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தானராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai