சுடச்சுட

  

  விழுப்புரத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் வைக்கப்பட்டுள்ள வாக்காளர் விழிப்புணர்வு பேனரில் பொதுமக்கள் ஆர்வமுடன் கையெழுத்திட்டு வருகின்றனர்.

  "மனதில் உறுதி வேண்டும், மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்' என்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறி வருகிறது.

  இதனையடுத்து, விழுப்புரம் நகரில் மாவட்ட ஆட்சியரக நுழைவுவாயில், நகராட்சி அலுவலக நுழைவாயில், விழுப்புரம் ரயிலடி, காந்தி சிலை அருகில் உள்பட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

  அந்த பதாகைகளில் பொதுமக்கள், மாணவர்கள், ஓட்டுநர்கள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும், தங்களின் வாக்கை மனசாட்சிப்படி அளிப்போம் என்று உறுதியளித்து, ஆர்வமுடன் கையெழுத்திட்டு செல்கின்றனர்.

   காந்தி சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள பதாகையில் ஏராளமானோர் கையெழுத்திட்டனர்.

  கள்ளக்குறிச்சி: தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கள்ளக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் விழிப்புணர்வு பதாகையில் கையொப்பமிட்டு வெள்ளிக்கிழமை  தொடங்கிவைத்தார்.

  கள்ளக்குறிச்சி-சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நான்கு முனை சந்திப்பு, நகராட்சி அலுவலக வளாகம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கப் பதாகையில் தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான கு.சண்முகநாதன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார்.

   பின்னர் அவர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

   இதில் வட்டாட்சியர் க.ராஜூ, நகராட்சி ஆணையர் ஐ.நக்கீரன் (பொறுப்பு), தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன், வருவாய் ஆய்வாளர் இ.பரந்தாமன், கிராம நிர்வாக அலுவலர் எழில், சுகாதார ஆய்வாளர் பெ.செல்வக்குமார் உள்ளிட்ட பலரும் விழிப்புணர்வுப் பதாகையில் கையொப்பமிட்டனர்.

  செஞ்சி: செஞ்சி சந்தைமேடு பகுதி,பேருந்து நிலையம் மற்றும் ஆலம்பூண்டி ஆகிய பகுதிகளில் கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் விலைமதிப்பில்லா வாக்கினை பணத்துக்காக விற்க மாட்டோம் என பொதுமக்கள் உறுதி மொழியேற்று கையெழுத்திட்டனர்.

  நிகழச்சிக்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜெயசீலன் தலைமை வகித்தார். செஞ்சி தொகுதி தேர்தல் அலுவலர் கருணாநிதி, வட்டாட்சியர் உமாமகேஸ்வரன், செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் செண்பகராஜன், டி.எஸ்.பி. ரவிசந்திரன், தனி வட்டாட்சியர் செல்வராஜ், துணை வட்டாட்சியர் மெகருன்னிசா, வருவாய் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  திருக்கோவிலூர்: சங்கராபுரம் வட்ட வருவாய்த் துறை சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

  நிகழ்ச்சியில் வருவாய் குறுவட்ட ஆய்வாளர் முகமதுஅலி கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.  இதுபோல் ரிஷிவந்தியம் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

  இதற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் குழந்தைவேல், ஜெகதீஷ், மணிகண்டன், வரதராஜன், பாக்கியராஜ், சிவக்குமார், சதீஷ், கிராம உதவியாளர்கள் சரஸ்வதி, பெரியசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai