சுடச்சுட

  

  கடலூர் மாவட்ட நேரு இளையோர் மன்றத்தின் கீழ் இயற்கை இளையோர் மன்றம் செயல்பட்டு வருகிறது.

   இந்த மன்றம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழை, வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தல், மீட்புப்பணி, சீரமைப்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதைப் பாராட்டும் வகையில், சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி சார்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

  விருதினை மன்றத்தின் தலைவர் ஆர்.சண்முகம், பொருளர் எஸ்.புவனேஸ்வரி, உறுப்பினர் ஜி.காமாட்சி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

  மேலும், இந்த விழாவில் கடலூர் காமராஜர் கல்வி அறக்கட்டளை, கடலூர் ஜேசிஐ, விடியல் அமைப்பு, அரசு தலைமை மருத்துவமனையின் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.புவனேஸ்வரி ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai